top of page

கந்தன் ராகவேந்திரா

வக்கீல்

Kanthan%20str8_edited.jpg

கந்தன் ராகவேந்திரா, லெய்செஸ்டெர் பல்கலைக்கழகத்திலிருந்து (UK) இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், 2020 ஜூலையில் சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞராக அனுமதிக்கப்பட்டார்.

 

பாருக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னால், கந்தன் ஒரு சட்டத்துணை வல்லுனராக இருந்தார், குடிமையியல், குடும்ப மற்றும் உயில் நிரூபித்தல் செயல்பாடுகளில் அனுபவம் பெற்றார். பயிற்சியின்போது, அரசியல் சட்ட & நிர்வாகச் சட்டம், குடிமையியல் செயல்பாடுகள், பெருநிறுவனச் செயல்பாடுகளில் கந்தன் அனுபவம் பெற்றார். முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கியமான முறையீட்டு வழக்குகளிலும் அவர் உதவியுள்ளார்.

 

கந்தனுடைய முதன்மைப் பணி, குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் ஆகும். வருங்காலத்தில் ஒரு நல்ல வழக்காடுபவராக, ஓர் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக மற்றும் நடுநிலைச் செயல்பாட்டாளராக வேண்டும் என்பதே இவருடைய நோக்கம். மேலும், ஒரு பொருளுள்ள பணிவாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இவர் பாடுபடுகிறவர், நலிந்தோருக்கான ஒரு குரலாக இருக்க விரும்புகிறவர்.

 

கந்தன் ஆங்கிலம் மற்றும் தமிழைச் சரளமாகப் பேசுகிறவர். அத்துடன், அவரால் மான்டரின் மற்றும் மலாய் மொழிகளிலும் உரையாட இயலும். தன்னுடைய ஓய்வு நேரத்தில் இவர் யோகா ஆர்வலராவார், பயணம் செய்தல் மற்றும் கால்பந்து விளையாடுதலை விரும்புகிறவர்.

  • Facebook
  • Instagram
  • LinkedIn

© 2020 by Yeo Perumal Mohideen Law Corporation. Singapore UEN No.200414768C

bottom of page